முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி, நாளை 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து பேரையாவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத உரிமைகளை பின்பற்றுவதை விட வாழ்வாதார உரிமை மிக முக்கியமானது. கொரோனா காலத்தில் பொதுநலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து