முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல்: மம்தாவுக்கு எதிராக போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      அரசியல்
Image Unavailable

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும்போட்டி நிலவியது. தேர்தலில்  திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த போதிலும், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.

இருப்பினும்  மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதனால்,  6 மாதங்களில் தேர்தலில்  போட்டியிட்டு அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய கட்டாயம் இருந்தது.  இதையடுத்து, மம்தா பானர்ஜி முன்பு வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூா் தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸின் சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்த நிலையில் காலியான பவானிபூா் உள்பட மேற்கு வங்கத்தில் காலியாக  இருந்த  3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர். 

பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில்  மம்தாவுக்கு எதிராக வழக்கறிஞர் பிரியங்கா திப்ரூவலை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் சட்ட ஆலோசகராக செயல்பட்ட பிரியங்கா திப்ரூவல், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து