டிக்கிலோனா – விமர்சனம்

Dikilona---Review

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. இந்தப் படத்தில் சந்தானம் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலமே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.  கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.வெளியிட்டுள்ளனர். படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  டிக்கிலோனா ஒரு டைம்பாஸ் நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக ஜீ ஓடிடியில் வெளியாகி உள்ளது. படம் காமெடி கலந்த சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. சிறப்பான டைம் டிராவல் காமெடி திரைப்படம். முதல்பாதி சிறப்பாக இருந்தது. யுவனின் பின்னணி இசை அருமை. அனகாவின் நடிப்பும் நன்றாக இருந்தது.. இளையராஜாவின் வந்தாலும் பாடல் மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. மேலும் அறிமுக இயக்குனர் கார்த்தி யோகி முதல் படத்திலே ஜொலித்திருக்கிறார். வரும் காலங்களில் இன்னும் ஜொலிக்க அவருக்கு வாழ்த்துக்கள்!

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து