பாரதியார் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

CM-1-2021-09-11

மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பாரதியார் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் நேற்று  அனுசரிக்கப்பட்டது.  பாரதியாரின் நுற்றாண்டு நினைவு நாளையொட்டி  சென்னை, மெரினாவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 

இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து