முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கிய அரபு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் DP World  நிறுவனத்தின் ரூபாய் 2000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த DP World  குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடு அரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.     

தமிழகத்தில் ஏற்கனவே DP World  குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள், கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் சுங்கக் கிடங்குகள், குளிர் பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்குகள் போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளை  நிறுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்  தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி,  DP World  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ரிஸ்வான் சூமர், தலைமை நிர்வாக அதிகாரி  ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து