இந்திய வீரர்கள் விளையாட மறுத்தனரா ? உண்மையை கண்டறிய கவாஸ்கர் வலியுறுத்தல்

Sunil-Gavaskar-2021-09-13

இந்திய வீரர்கள் 5 வது டெஸ்ட் விளையாட மறுத்ததை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன் என்றும், இந்திய அணியை விமர்சிக்கும் முன் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

5-வது டெஸ்ட் ரத்து...

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்தது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரம்பத்தில், மான்செஸ்டரில் தொடரைத் தீர்மானிக்கும் 5 வது டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்க இந்திய அணி மறுத்துவிட்டது என்று பலரும் குற்றம் சாட்டினார்கள். ஆனால், இந்திய அணியின் வீரர்கள் தங்கள் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு களத்தில் இறங்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீடுதான் கொரோனா தொற்றுக்கு காரணம் என்று பலரும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், "புத்தக வெளியீட்டு விழாவின் போது இது நடந்தது என்பது யாருக்குத் தெரியும்? ஏனென்றால் புத்தக வெளியீட்டுக்குப் பிறகும், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அவர்கள் எதிர்மறையான முடிவுகளையே பெற்றனர். போட்டியின் முந்திய நாளின்போதும் நடந்த சோதனைகள் அனைத்தும் எதிர்மறை முடிவுகளையே தந்தன. 

ஆனால், இந்திய வீரர்கள் போட்டியை விளையாட மறுத்துவிட்டார்கள் என்று தெரிவிக்கும் அறிக்கைகள் ஆங்கில செய்தித்தாள்களில் மட்டுமே உள்ளன. அவர்கள் இந்திய அணியைப் பற்றி எதுவும் நல்லதாக சொல்லவோ எழுதவோ மாட்டார்கள்; அவர்கள் எப்போதும் இந்திய வீரர்களையே பொறுப்பேற்கச் செய்வார்கள். தயவுசெய்து உண்மை என்னவென்று கண்டுபிடித்து, பின்னர் விரல்களைக் காட்டுங்கள்" என்று கூறினார்

வெல்ல முடியும்... 

 

மேலும், "தொடரை 2-1 என முன்னிலைப்படுத்த எங்கள் வீரர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர். மேலும் மான்செஸ்டரில் அவர்கள் தொடரை விளையாட விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தொடரை 3-1 என வெல்ல முடியும். எனவே இந்திய வீரர்கள் 5 வது டெஸ்ட் விளையாட மறுத்ததை நான் ஒருபோதும் நம்ப மாட்டேன். எந்த ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளை செய்யக்கூடாது"என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து