உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: அ.தி.மு.க .- பா.ஜ.க. பேச்சுவார்த்தை

ADMK 2021 09 19

Source: provided

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. 

தமிழகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. - பா ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அ.தி.மு.க. சார்பில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வேத சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து