ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூற சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

Rajendra-Balaji 2021 09 20

Source: provided

சென்னை : மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோதும் வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். பின்னர், இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அபோது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து, ராஜேந்திர பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து