முக்கிய செய்திகள்

அரபி-வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: கேரளாவில் எர்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      இந்தியா
Kerala 2021 10 16

Source: provided

திருவனந்தபுரம் : அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில், கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிசூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல்,  திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து