முக்கிய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்.

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      சினிமா
Santhanam 2021 10 17

Source: provided

Labrynth Films தயாரிப்பு நிறுவனம்  தமிழ் திரைத்துறையில் “வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தின் மூலம்,  தனது பயணத்தை துவங்கியது. தற்போது இயக்குநர்  மனோஜ் பீடா இயக்கத்தில்  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரித்துள்ளது. 

ஏஜெண்ட் கண்ணாயிரம்’  படத்தின் படப்பிடிப்பு  ஏற்கனவே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

சந்தானம் மற்றும் ரியா சுமனுடன் ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E ராமதாஸ், அருவி மதன், ஆதிரா, இந்துமதி, ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர்  மனோஜ் பீடா இயக்கியுள்ள  ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம்  நடிகர் சந்தானத்தை முற்றிலும் வேறொரு கோணத்தில் காட்டும் படமாக அமைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து