முக்கிய செய்திகள்

வருவாய் குறைவாக உள்ள கோயில்களை அதிக வருவாய் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Sekar-Babu-2021-09-29

Source: provided

சென்னை : தமிழகத்தில் வருவாய் குறைவாக உள்ள கோயில்களை அதிக வருவாய் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரம்  அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் தெரிவிக்கையில், கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின்பு திருக்கோயில் சிதிலடைந்து உள்ளதை கண்டு மனம் கனமாக மாறி உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொண்டு  விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். இரண்டு குளங்கள் ஊராட்சி வசம் உள்ளது அதனை மீட்டு சீரமைக்கப்படும். குருக்கள் இல்லம், சின்ன, பெரிய என இரண்டு சத்திரங்கள் இருபது வருடங்களாக இடிந்த நிலையில் உள்ளது. அதனை பழமை மாறாமல் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட வரைபடம் தயார் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் குறைவாக உள்ள கோயில்கள், வருவாய் அதிகம் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இறைப்பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துள்ள அர்ச்சகர்கள் வாழ்வில் முதல்வர் ஒளி ஏற்றுவார். இக்கோயில் அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து