முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு: பாக். முன்னாள் வீரர் இன்ஜமாம் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

உலகளவில் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிதான் அபாயகரமானது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

அதிக வாய்ப்பு...

இந்திய கிரிக்கெட் அணி 2021 டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிறு அன்று சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இன்சமாம் இதனை தெரிவித்துள்ளார். 

கைகொடுக்கலாம்... 

எந்தவொரு தொடரிலும் இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என சொல்ல முடியாது. இருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் குறித்து சொல்லலாம். எனது பார்வையில் இந்த முறை மற்ற அணிகளை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய வீரர்களுக்கு அமீரக சூழலும் அதற்கு கைகொடுக்கலாம். டி20 கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ள அணியாகவும் இந்தியா உள்ளது. 

தேவைப்படவில்லை... 

 

பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கூட ரன்களை சேஸ் செய்ய அவர்களுக்கு தேவைப்படவில்லை.  இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோதி விளையாட உள்ள இந்த சூப்பர் 12 போட்டியை ஃபைனலுக்கு முந்தைய ஃபைனல் என சொல்லலாம்” என தெரிவித்துள்ளார் இன்சமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து