முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் கணவருடன் அமெரிக்கா சென்றார் ஜப்பான் முன்னாள் இளவரசி - வாடகை வீட்டில் தங்குகிறார்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : காதல் திருமணம் செய்து கொண்ட ஜப்பான் முன்னாள் இளவரசி கணவருடன் அமெரிக்கா சென்றார். அங்கு கணவருடன் வாடகை வீட்டில் தங்குகிறார்.

அரச குடும்பத்தை துறந்து, தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவில் குடியேறக்கூடும் என வதந்திகள் உலா வந்தன. அவை உண்மைதான் என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.

மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் டோக்கியோவில் இருந்து பயணிகள் விமானத்தில் நியூயார்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார். அப்போது அவர்களைப் படம் பிடிக்கவும், பேட்டி காணவும் அங்கே 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும், கேமராமேன்களும் குவிந்தனர். ஆனால் அவர்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் மாகோ, தனது காதல் கணவர் கீ கொமுரோவுடன் விமானத்தில் ஏறிச்சென்று விட்டார். 

காதல் கணவருடன் அமெரிக்கா சென்ற ஜப்பான் முன்னாள் இளவரசி மாகோ அங்கு வாடகை வீட்டில் தங்குகிறார்.கீ கொமுரோ நியூயார்க்கில் சட்டம் படித்து அங்கே வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!