எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நவம்பர் 29-ம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 29-ம் தேதி அன்று அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது 2 நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது குறித்து பின்னர் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


