முக்கிய செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஈக்வடாரை வீழ்த்தியது ரஷ்யா

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      விளையாட்டு
Sports-4

Source: provided

மாட்ரிட்: டேவிஸ் கோப்பைக்கான ‘ஏ’ குரூப்பில் ஸ்பெயின், ரஷ்யா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 2-வது ஒற்றையர் போட்டியில் ஈக்வடாரின் எமிலியோ கோமசை 6-0, 6-2 என நேர் செட்களில்  ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார். இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நடந்த முதலாவது ஒற்றையர் போட்டியில் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லெவ் 6-3, 4-6, 6-1 என 3 செட்களில் ஈக்வடாரின் முன்னணி வீரர் ராபெர்ட்டோ குவிராசை போராடி வீழ்த்தினார்.

இந்த வெற்றிகளின் மூலம் 2-0 என்ற கணக்கில் தற்போது குரூப் ஏ பிரிவில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. டேவிஸ் கோப்பை ‘ஈ’ குரூப்பில் இத்தாலி, கொலம்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில்  நடந்த ஒற்றையர் போட்டியில் கொலம்பிய வீரர் டேனியல் இலாஹி காலனை 7-5, 6-0 என நேர் செட்களில் இத்தாலியின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ஜான்னிக் சின்னர் வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து