Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

Source: provided

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிகாரைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை தியாகராய நகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன், சிறப்பு தீவிர திருத்தம் என்பது குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ஜனநாயகத்தின் ஆணிவேரை ஆழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம். வெளி மாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. திமுகவின் நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டியது நமது கடமை என வைகோ குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து