முக்கிய செய்திகள்

ராஜவம்சம் - திரைவிமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      சினிமா
Dynasty---Movie-Review 2021

Source: provided

கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சிங்கம் புலி, மனோபாலா, சதீஷ், தம்பி ராமையா, விஜய குமார், ராதாரவி, யோகி பாபு, ரேகா என மிகப்பெரிய நடிகர் பட்டாளாமே இணைந்து நடித்திருக்கும் படம் தான் ராஜவம்சம். ஐ.டி.யில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு ஒரு பெரிய ப்ராஜக்ட் கொடுக்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு தொடர்புடையது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவர் அதனை கையாளுகிறார். இன்னொரு புறம் சசிகுமாரின் பெரிய குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்கிறது. இவ்விரண்டுக்கும் இடையே நடக்கும் காட்சிகளின் தொகுப்புதான் ராஜவம்சம் படத்தின் கதை. குடும்பம், காதல், வேலை, நட்பு என இந்த நான்கு புள்ளிகளிலும் ஒரு நடிகராக தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார் சசிகுமார். யோகி பாபு வழக்கம் போல வந்து நடித்து விட்டுச் செல்கிறார்.. மாடு ஈனும் ஒரு காட்சியில் நாயகி நிக்கி கல்ராணி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சாம்.சி.எஸ்.சின் இசை அருமை. மொத்தத்தில் இந்த ராஜவம்சம் ஒரு முறை பார்க்கக்கூடிய ஒரு குடும்பச்சித்திரம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து