முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க.விலிருந்து அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.அன்வர்ராஜா, இன்று (டிச.1.) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முதலே அன்வர் ராஜா, அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது குறித்து விமர்சித்து வந்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அன்வர் ராஜா மீது அதிருப்தியில் இருந்தனர். அண்மையில் நடந்த அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ்., இருவரையும் அன்வர் ராஜா கடுமையாக விமர்சித்து வந்தார். 

இந்நிலையில் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து