முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: தமிழக அரசாணை வெளியீடு

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று ஏனையவற்றுக்கிடையே, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும் என முதல்வரால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தி ஏற்கனவே அரசாணை (நிலை) எண்.63, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4(2)) துறை நாள், 08.10.2021-ல் ஆணையிடப்பட்டுள்ளது. 

மேற்கண்டுள்ள பணியாளர்கள் பயன்பெற்று வருவதைப் போன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்கள் பயன்பெறும் வண்ணம், குழந்தைகள் மையங்களில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58-லிருந்து 60-ஆக (Completion of 60 years)  உயர்த்தி இன்று(நேற்று) ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வரசாணையினால் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் 40,601 அங்கன்வாடி உதவியாளர்கள் பயனடைவர். அவர்கள் ஊக்கமுடன் பணியாற்றி செம்மையான முறையில் இத்திட்டத்தினை செயல்படுத்திட இவ்வரசாணை வழிவகுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து