முக்கிய செய்திகள்

பார்லி.யில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது: 'அணைகள் பாதுகாப்பு மசோதா'

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      இந்தியா
Central-Government 2021 11

பாராளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது 'அணைகள் பாதுகாப்பு மசோதா'. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையிலும் நேற்று நிறைவேறியது. 

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நேற்று நீண்ட விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநில எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

அணைகள் பாதுகாப்பு மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி திருச்சி சிவா  வலியுறுத்தினார். அணைகள் மீது மாநிலங்களின் அதிகாரம் எந்த விதத்திலும் குறைக்கப்பட கூடாது என்றும் அவர் கூறினார். விவாதத்திற்கு பிறகு, அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

கடந்த 2019ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி ஜனாதிபதியின் ஒப்புதலுகாக அனுபப்பட்டு மசோதா சட்டமாக இயற்றப்படும். நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அணைகளை ஒரே சீராக பாதுகாப்பதற்காகவும், உருவாக்கப்பட்டதே அணை பாதுகாப்பு மசோதா. 2010ம் ஆண்டில் இருந்து இந்த மசோதா பல்வேறு அமர்வுகளில் தாக்கல் செய்தும் மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து