முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சம்: தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்ட ஐ.நா. பொதுச் செயலாளர்

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பொதுச் செயலாளருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால், அடுத்த சில நாட்களுக்கு அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று அவர், மான்ஹாட்டனில் நடைபெற்ற ஐ.நா. ஊடக சம்மேளனத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் ஐ.நா. தலைவர் தனிமைப்படுத்துதலை அறிவித்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து மேலும் தகவல்களைப் பகிர பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் விவரிக்க மறுத்து விட்டார்.

குத்ரேஸ் அண்மையில் தான் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். உலகளவில் இன்னும் சில நாடுகளில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத மக்கள் இருக்கும் நிலையில் வளர்ந்த நாடுகள் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை தள்ளி வைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி வருகிறது. இதனால், மிகுந்த தயக்கத்திற்குப் பின்னரே அண்டோனியோ குத்ரேஸ் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து