முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-தென்கொரியா மோதும் போட்டி ரத்து

புதன்கிழமை, 8 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த இந்தியா-  தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து  செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி வீராங்கனை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்படுவதாக ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிறந்த கிரிக்கெட் வீரர் விருது:  பரிந்துரைக்கப்பட்ட வார்னர் !

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகள் விருதை  ஐசிசி வழங்கி வருகிறது. நவம்பர் மாதத்துக்கான விருது பெறுபவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் , டிம் சவுதீ  மற்றும் அபித்  அலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் ஆனம் அமின், பங்களாதேஷின் நஹிதா அக்தர் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

20 ஓவர்  உலகக்கோப்பையில் மீண்டும் பார்முக்கு வந்து அசத்தி  ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்  டேவிட் வார்னர். அதே போல் வங்காளதேசத்துக்கு  எதிராக கலக்கும் பாகிஸ்தான் தொடக்க வீரர் அபித்  அலி பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் டிம் சௌதீ கேப்டன் பொறுப்பை ஏற்று நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய காரணத்தால் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாட்மிண்டன் தொடர்: இந்திய வீரர் அமான் சாம்பியன்

தென்னாப்பிரிக்காவில்  நடைபெற்ற சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்திய  பாட்மிண்டன் வீரர் பரோக் சஞ்சய் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பாட்மிண்டன் கூட்டமைப்பின் சார்பாக தென்னாப்பிரிக்கா சர்வதேச  பாட்மிண்டன் தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் தொடங்கியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார் அமான் பரோக் சஞ்சய் . தரவரிசையில் 300-வது இடத்தில் உள்ள அமான் பரோக் சஞ்சய்  இறுதி போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ராபர்ட் சம்மர்ஸை (தென்னாப்பிரிக்கா) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்த  அமான் பரோக் பின்னர் கடுமையாகப் போராடி  21-16, 21-12  என்ற கணக்கில் ராபர்ட் சம்மர்ஸை  வீழ்த்தினார்.நடப்பு கேலோ இந்தியா யூத் கேம்ஸ் சாம்பியனான  அமான் பரோக் , கடந்த மாதம் நடைபெற்ற  போட்ஸ்வானா இன்டர்நேஷனல் பியூச்சர் சீரிஸ் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். அணிக்கு பயிற்சியாளர்  ஆகிறார் 'ஹர்பஜன் சிங்'

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். ஐ.பி.எல். போட்டியில் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடினார்.தற்போது ஐ.பி.எல்.லில் விளையாடுவதில் இருந்தும் அவர் ஓய்வு பெற்று உள்ளார். 

41 வயதான அவர் ஐ.பி.எல். போட்டியில் ஒருஅணிக்கு ஆலோசகராக, பகுதி நேர பயிற்சியாளராக அல்லது வழிகாட்டியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எந்த அணிக்கு ஆலோசகராக இருப்பார் என்பது தெரியவில்லை.

ஆஸி. ஓபன் டென்னிஸ்:  கனடா வீராங்கனை விலகல்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 46-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகி இருக்கிறார்.

‘கொரோனா பாதிப்பு காரணமாக பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் உடல் ரீதியாகவும், மனதளவிலும் அதிகமாக பாதிக்கப்பட்டேன். இதனால் என்னால் போதிய அளவு பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அடுத்த சீசனுக்கு தயாராக எனக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த விலகல் முடிவை எடுத்து இருக்கிறேன்’ என்று பியான்கா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து