முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 லட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து / பச்சைபயிறு) ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நெல் தரிசில், உளுந்து மற்றும் பச்சைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்கள் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள்,   நுண்ணூட்டச்சத்துக்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள், சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான்கள், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் தார்ப்பாய்கள் ஆகியன மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மேலும், உற்பத்தி செய்யப்பட்ட பயறு வகைப் பயிர்களை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ்,  வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  நெல் தரிசில் பயறுவகைப் பயிர்களை பயிரிடுவதின் மூலம் மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் இலாபமும் கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர்.வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் நடராஜன், வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை, வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர்  முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து