முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு: அமைச்சர் பொன்முடி தகவல்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, 

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பருவத் தேர்வுகள் காலவரையின்றி ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சீரான பின், கல்வியாளர்களுடன் நன்கு ஆலோசித்து தேர்வு நடைபெறும் தேதிகள், தேர்வு நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும். அதுவரை கல்விநிறுவனங்களில் செய்முறைத் தேர்வுகள் மட்டுமே நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

கல்வியின் தரத்தையும், மாணவர்கள் நலனையும் கருதி நன்கு கலந்து ஆலோசித்து தான் தற்போது இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைக்கக் கூடாது என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரச்சொல்லும் கல்விநிறுவனங்கள் குறித்து தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகளுக்கான பாடங்கள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வுகளுக்கு தயாராகும் பட்சத்தில் தற்போது மாணவர்களுக்கு ஸ்டடி லீவ்  விடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்தி தேர்வுகளுக்கு தயார்  செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து