முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 பேர் விண்ணப்பம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பொங்கல் தினமான நாளை (14-ம் தேதி) அவனியாபுரம், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றது.  ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு அடுத்த நாள் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

இந்தநிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 700 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே அனுமதி என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.  ஜல்லிக்கட்டில் 4,534 காளைகள் பங்கேற்க அவற்றின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து