முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலையில் நாளை நடை அடைப்பு

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் மகரவிளக்கு கால தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து 20ம் தேதி காலை (நாளை) கோயில் நடை சாத்தப்படும். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

நேற்று வரை பக்தர்கள் நெய்யபிஷேம் செய்து கொள்ளலாம். இன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நாளை (20ம் தேதி) காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் கோயில் நடை திறக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து