முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் படைத்த 2 சாதனைகள்

வியாழக்கிழமை, 9 மே 2024      விளையாட்டு
9-Ram-52

Source: provided

ஐதராபாத்: டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புதிய சாதனைகளை படைத்துள்ளது.

166 ரன்கள் இலக்கு...

ஐபிஎல் தொடரில் ஐதராபாதில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் எடுத்து அசத்தினர்.

அதிகபட்ச ஸ்கோர்.... 

ஆடவர் டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் முதல் 10 ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னதாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தில்லிக்கு எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. நேற்றையப் போட்டியில் 167 ரன்கள் அடித்ததன் மூலம், தங்களது சொந்த சாதனையை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மீண்டும் முறியடித்துள்ளது. மேலும் இந்த போட்டியில்  இந்த போட்டியில் 166 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணி 62 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 100 ரன்னுக்கு மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

10 ஓவர்களில் அதிகபட்ச ரன்கள்:

1) 167/0 - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோவுக்கு எதிராக, 2024.

2) 158/4 - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - தில்லிக்கு எதிராக, 2024.

3) 148/2 - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பைக்கு எதிராக, 2024.

4) 141/2 - மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாதுக்கு எதிராக, 2024.

அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி:

1. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 62 பந்துகள்.

2. டெல்லி கேப்பிடல்ஸ் - 57 பந்துகள்.

3. டெக்கான் சார்ஜர்ஸ் - 48 பந்துகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து