முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது:ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
murmu--

Source: provided

புதுடெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பெற்றுக்கொண்டார்.

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அதில், மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பதம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு, விருதுகளை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கெளரவித்தார். அப்போது விஜயகாந்த்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியிடம் இருந்து விருதினை வாங்கும்போது ஒரு நொடி மேலே பார்த்து பிரேமலதா கண் கலங்கினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து