முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானிய இயக்குநருக்கு 8 ஆண்டு சிறை

வியாழக்கிழமை, 9 மே 2024      உலகம்
Jail-1

Source: provided

டெக்ரான்:ஈரானிய இயக்குநருக்கு சவுக்கடியுடன் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது ரசூலோஃப் எனும் பிரபல ஈரானிய இயக்குநரின் தி ட்விலைட், அயர்ன் ஐஸ்லேண்ட், குட் ஃபாய், மனுஸ்கிரிப்ட் டோன்ட் பர்ன், ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி ஆகிய படங்கள் உலகளவில் கவனம் பெற்றன. 52 வயதான முகமது ரசூலோஃப்பின் தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் அடுத்த வாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருந்தது. ஏற்கனவே பல படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றுள்ளன.

இந்நிலையில் இவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவரது வழக்கறிஞர் தனது எக்ஸ் பக்கத்தில், “தி சீட் ஆஃப் சேக்ரட் ஃபிக் எனும் படத்தினை உரிய அனுமதியின்றி எடுத்திருக்கிறார்; நடிகைகள் சரியாக ஹிஜாப் அணியவில்லை, ஹிஜாப் அணியாமலும் படமாக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவிடப்பட்டுள்ளது. படக்குழுவின் முக்கியமான நபர்கள் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவும் முகமது ரசூலோஃப் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2010, 2017, 2020 என பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏ மேன் ஆஃப் இன்டக்ரிடி படம் தங்கப்பனை விருது வென்றது. ஈரானில் விதிக்கப்படும் மரணதண்டனை குறித்தான தேர் இஸ் நோ எவில் எனும் படம் தங்கக் கரடி விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து