முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய அணிக்கு 2-வது வெற்றி

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டிரினிடாட்: ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.   

307 ரன்கள்... 

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி பிரிவில் நடந்த போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 307 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரகுவன்ஷி, ஹர்னூர் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

133 ரன்னுக்கு...

ஹர்னூர் சிங் 88 ரன்னும், ரகுவன்ஷி 79 ரன்னும், ராஜ் பாவா 42 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜ்வர்தன் 17 பந்தில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில், அயர்லாந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்காட் மெக்பத் 34 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா 174 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது. இந்தியா சார்பில் சங்வான், அனீஷ்வர் கவுதம், கவுஷல் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து