Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளை பஸ்சில் இருந்து இறக்கிவிடக் கூடாது: தமிழக போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத்திறனாளிகளை பஸ்சில் இருந்து இறக்கிவிடக் கூடாது என்று ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஓட்டுனர், நடத்துனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

  • 1. ஒரு மாற்றுத்திறனாளி நின்றிருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்;  பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை உபசரிப்புடனும் அன்புடனும்  நடத்த வேண்டும்.
  • 2.மாற்றுத் திறனாளி பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது முறையாக பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.
  • 3. பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத் திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
  • 4.மாற்றுத்திறனாளிகளிடம் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
  • 5.அரசு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் சிரமம் இல்லாமல் பயணிக்க நடத்துனர் உதவ வேண்டும்.
  • 6. மாற்றுத் திறனாளிகள் அவர்களது இருக்கையில் அமரவும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஏறவும் உதவ வேண்டும்.
  • 7. சாதாரண கட்டண பேருந்தில் மாற்றுத் திறனாளியுடன் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கலாம்.
  • 8.அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து