Idhayam Matrimony

எஃப்.ஐ.ஆர் – விமர்சனம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்து அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எப்.ஐ.ஆர். இப்படம் மஞ்சிமா மோகன், ரைசா, ரெபா மோனிகா, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ளது. ஐஐடி’யில் படிப்பை முடித்துவிட்டு ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் விஷ்ணு விஷால். இலங்கையில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்த ஒரு தீவிரவாத குழு இந்தியாவிற்கும் மிரட்டல் விடுக்கிறது. இந்த சமயத்தில், கம்பெனிக்காக வாங்கிய கெமிக்கலை வெடிகுண்டு செய்வதற்காககத் தான் வாங்கினார் என்று மத்திய போலிசார் விஷ்ணுவை கைது செய்கின்றனர்… சாட்சிகளும் தடயங்களும் இவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்படுகிறார். விஷ்ணு விஷால் யார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டாரா என்பதே படத்தின் கிளைமாக்ஸ். கல்லூரி கால இளமை, வாழ்க்கையின் மீது வெறுமை, என பல விதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால். NIA உயர் அதிகாரியாக வரும் கெளதம் மேனன் படத்திற்கு நல்ல தேர்வு. ரைசா தனக்கு கொடுத்தள்ள கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார். மஞ்சிமா மோகனுக்கும் ரெபா மோனிகாவுக்கும் வந்து போகும் காட்சிகள் தான். மற்றபடி, மேக்கிங்கில் தனித்துவத்தை வெளிக்காட்டியதற்காக இயக்குனர் மனு ஆனந்தை பாராட்டலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து