முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-வாகனங்கள் விற்பனையில் இந்தியா 162 சதவீதம் வளர்ச்சி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
nithin-gadkari-2022 03 31

இந்தியா இந்த ஆண்டு மின்சார வாகனங்கள் விற்பனையில் ஒட்டுமொத்தமாக 162 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கேள்விக்கு பதிலளித்த கட்கரி, இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்து 423 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 75 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்கள் 238 சதவீதமும், பேருந்துகள் 1,250 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தம் 10,95,746 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றிற்கு 1,742 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

பேட்டரி மாற்றும் கொள்கை பற்றிய் பேசிய கட்கரி, மொத்தத்தில் 85 சதவீதம் லித்தியம் அயர்ன் பேட்டரி இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்றார். பேட்டரியில் நிலையான தரத்தை தாங்கள் வைத்திருக்கிறோம் என்றார். எந்த உற்பத்தியாளரும் நிலையான தரத்தின்படி செயல்படவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்கரி கூறினார்.

 

மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு, பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதே எங்கள் முன்னுரிமை என்று கட்கரி கூறினார். அனைத்து புதிய ஆராய்ச்சிகளையும் வரவேற்பது, புதிதாக தொடங்குபவர்களுக்கு வாய்ப்பளிப்பது, இதன் மூலம் பயனாளர்களுக்கு மிகவும் வசதியான மற்றும் பொருளாதார ரீதியாக லாபகரமான தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும்  என்று நிதின் கட்கரி கூறினார். தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒவ்வொரு 40 கிலோ.மீட்டருக்கும் சார்ஜிங் வசதிகளை உருவாக்கி வருகிறது, அதற்காக சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்த முயற்சித்து வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து