முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆர்வம் காட்டிய எம்.பி.க்கள் !

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
CM-MP 2022-03-31

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பல எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர்.

தி.மு.க. கட்சி அலுவலகம் டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது. திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பாராளுமன்ற வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பல எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்ற நிலையில், திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து