முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை உயர்வு அமலுக்கு வந்தது: மருந்து விலை உயர்வை திரும்பப் பெற பார்லி.யில் உறுப்பினர்கள் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 1 ஏப்ரல் 2022      இந்தியா
Parliament 2022 04 01

கொரோனா, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை நேற்று முதல் 10.7 வரை சதவீதம் உயர்ந்துள்ளது. விலை உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அதை திரும்ப பெற வேண்டும் என்று நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக் குறித்து மாநிலங்களவை கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். 

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை திரும்பப் பெற வலியுறுத்தினார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவின் மருந்துப் பொருள்களின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் தேசிய மருந்துப் பொருள்கள் விலை ஆணையம் 800 மருந்துகளின் மொத்த விலையை 10.7 சதவீதம் உயா்த்த அனுமதி அளித்தது. இதய அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் ‘ஸ்டென்ட்’, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் உலோகப் பொருள்களின் விலையும் உயருகிறது. தற்போது விலை உயா்வுக்கு உள்ளான மருந்துகள் மொத்த மருந்துச் சந்தையில் 18 சதவீதமாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.1.5 டிரில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!