முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி மைல்கல்லில் உள்ள குடிமகன் வரை மருத்துவ சேவை வழங்குவதே முன்னுரிமை : மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Mansuk-Mandavia 2022 05 08

Source: provided

காந்திநகர் : கடைசி மைல்கல்லில் உள்ள குடிமகன் வரை மருத்துவ சேவை வழங்குவதே எங்கள் முன்னுரிமை  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கெவாடியாவில் மே 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடந்த “ஆரோக்கிய சிந்தனை முகாமின்” நிறைவு நாள் நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால், மாநில சுகாதார மந்திரிகள், சுகாதாரத்துறை செயலாளர்கள்,  நிதி ஆயோக், ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசியதாவது:-

சுகாதாரம் என்பது வர்த்தகம் அல்ல, நமக்கான சேவையாகும். கடைசி மைல்கல்லில் உள்ள குடிமகன் வரை சுகாதார சேவைகளை வழங்குவதே எங்கள் முன்னுரிமையாக உள்ளது.மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மேலும் 'இந்தியாவின் மூலம் குணப்படுத்துதல்' மற்றும் 'இந்தியாவில் குணமடைதல்' ஆகிய இரண்டும் நமது சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் இரண்டு முக்கிய தூண்கள் ஆகும். இது உலகளாவிய சுகாதாரத் தலைமையாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.

சுகாதாரத் துறையில் இந்தியாவை 'விஸ்வ குருவாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.காசநோயாளிகள் அனைவரையும் தத்தெடுத்து, அவர்களின் நல்வாழ்வு, ஊட்டச்சத்து, சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் 'காசநோயாளி/கிராமத்தை தத்தெடுப்பு' திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த திட்டம், 2025-க்குள் ‘காசநோய் இல்லாத இந்தியா’ என்ற நமது இலக்குக்கு பெரும் பங்களிப்பை வழங்கும். மேலும் இந்த மாநாடு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு காசநோய் இல்லாத இந்தியா மற்றும் கண்புரை அறுவை சிகிச்சையின் பின்னடைவை நீக்குதல் உள்ளிட்ட துறை சார்ந்த இலக்குகளை வழங்கியுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கான பிரச்சாரம் தொடங்கப்படும்.

தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை என்பது நமது சுகாதார அமைப்புகளின் எதிர்காலம். கடைசி மைல் வரை சுகாதார சேவைகளை வழங்க இது ஒரு சரியான தளத்தை வழங்குவதால், அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும்.‘ஆயுஷ்மான் பாரத் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ ஒரு முக்கியமான திட்டமாகும்.

சுகாதாரத்துறையில் டிஜிட்டல் புரட்சிக்கு இந்தியாவைத் தூண்டும் முக்கியமான திட்டமாகும். போர்க்கால அடிப்படையில் (ஏபிஹச்ஏ)-ஐடியை உருவாக்கும் நோக்கில் நாம் செயல்பட வேண்டும். இதன்மூலம் மருத்துவ சேவையில் ஒருவரின் தனியுரிமையை இது உறுதி செய்கிறது.இவ்வாறு அவர் உரையாற்றினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து