முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

புதன்கிழமை, 18 மே 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 1,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்தது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,569 ஆக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது.

அதேநேரம் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு இரண்டாயிரத்திற்கும் கீழ் உள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 27 ஆயிரத்து 199 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 33 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 31 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று முன்தினம் டெல்லியில் 2 பேர் இறந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,24,293 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. இதில் நேற்று முன்தினம் 2,549 பேர் அடங்குவர். தற்போது 15,647 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து