முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லடாக்கில் பாங்காங் ஏரி அருகே புதிய பாலம் கட்டும் சீனா: செயற்கைக்கோள் புகைப்படம் உறுதி

வியாழக்கிழமை, 19 மே 2022      உலகம்
Pangong-Lake-2022-05-19

கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய பாங்காங் ஏரி அருகே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாகவும், சீனாவின் நடவடிக்கைகள் குறித்து அறிந்த சில நபா்கள் மூலமாகவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பாலம், சீன படைகள் அந்த பிராந்தியத்தில் விரைந்து முன்னேறுவதற்கு வசதியாக கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  சீன ராணுவ வீரா்களின் அத்துமீறலைத் தொடா்ந்து கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் இந்தியா - சீனா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், இந்தக் கட்டுமானப் பணியை சீனா தொடா்ந்து வருகிறது. அந்தப் பகுதியில் அண்மையில் முதல் பாலத்தை கட்டி முடித்த சீனா, தற்போது இரண்டாவது பாலத்தைக் கட்டி வருகிறது.  

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாங்காங் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலின்போது, அத்துமீறி நுழைந்த சீன வீரா்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவத்தினா் கொண்டு வந்தனா். இந்தப் பின்னடைவு காரணமாக, அந்தப் பகுதியில் தங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், சீனா மேற்கொண்டு வரும் இந்த இரண்டாவது கட்டுமானம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை சாா்பில் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம், ரணுவத்தின் தயாா்நிலையை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதியில் இந்தியாவும் பாலங்கள், சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளை அமைத்து வருகிறது. 

சீனாவின் புதிய கட்டுமானம் குறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன் தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் மிகப்பெரிய ராணுவத் தளவாடங்களை எளிதாக எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும் வகையில் மிகப்பெரிய பாலம் ஒன்றை, ஏற்கெனவே அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் பாலத்துக்கு இணையாக சீனா அமைத்து வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லடாக்கிலிருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளுக்குச் செல்வதற்கான தூரத்தை வெகுவாக குறைக்கும் நோக்கில் இந்தப் பாலம் கட்டப்படுவதாகத் தெரிகிறது. மேலும், இந்தப் பாலம் இரண்டு புறங்களும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருவதையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டு, தனது பதிவுடன் செயற்கைக்கோள் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து