முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Neet 2022 03 12

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 7-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 15-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

 

இதனிடையே ராணுவ மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படும் பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கும், நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20(இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று முடிவடைய உள்ள நிலையில், இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து