முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா: ஐ.நா.

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      உலகம்
UN 2022-05-20

Source: provided

நியூயார்க் : பணவீக்கம் அதிகரித்த போதிலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.   

போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய பொருளாதாரம் 2021-ம் ஆண்டில் 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது. இந்தாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்த போதிலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து