முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்தது

சனிக்கிழமை, 21 மே 2022      தமிழகம்
Gold 2021 11 23

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,536-க்கு விற்பனையானது.

சென்னையில் கடந்த 18-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அதன்பிறகு தினமும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் கிராம் ரூ.4,793-க்கு விற்ற தங்கம் நேற்று ரூ.4,817 ஆக அதிகரித்து உள்ளது. பவுன் 38,344-ல் இருந்து ரூ38,536-ஆக உயர்ந்து இருக்கிறது. தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.24-ம், பவுன் ரூ.192-ம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களில் பவுனுக்கு ரூ.624 உயர்ந்துள்ளது.

முகூர்த்த மாதமாக திகழும் வைகாசி மாதம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொது மக்கள் மத்தியில் கவலையை அளித்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ 66.30-ல் இருந்து 65.90 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.66,300-ல் இருந்து 65,900 ஆகவும் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து