முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

M.S.ராஜ் இயக்கிய முத்துநகர் படுகொலை

சனிக்கிழமை, 21 மே 2022      சினிமா
Muthunagar 2022-05-21

Source: provided

2017 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மெரினாவில் நடந்த போராட்டத்தை மைய்யமாக வைத்து மெரினா புரட்சி' என்ற ஆவணப்படத்தை M.S.ராஜ் இயக்கியிருந்தார். இப்போது 2018 மே மாதம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை மைய்யமாக வைத்து முத்துநகர் படுகொலை என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் M.S.ராஜ். நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவ் டாக்கீஸுடன் இணைந்து இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். படம் குறித்து பேசிய இயக்குனர் ராஜ், இப்படத்தில் 2018 மே மாதம் 22 & 23 தேதியில் நடந்த கொடூர சம்பவங்கள் சாட்சியங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட்டோம். வழியும் கண்ணீரை துடைத்தபடியே படத்தை பாராட்டியவர்கள் விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர். தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் 32 நாடுகளில் இந்த படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம் என்றார் இயக்குனர். காவல் துறையின் அத்து மீறல்களை தோலுறித்து காட்டிள்ள இந்த முத்துநகர் படுகொலை ஆவணப்படம் www.tamilsott.com என்ற இணையதளத்தில் வெளியாகி இப்போது டிரென்டில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து