முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'

திங்கட்கிழமை, 23 மே 2022      உலகம்
KIM 2022-05-22

தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார். 

வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதேவேளை வடகொரியாவோ தங்கள் நாட்டில் பரவுவது காய்ச்சல் என கூறிவருகிறது. நாடு முழுவதும் இதுவரை 28 லட்சம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. 

குறிப்பாக ஒரேநாளில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஆனால், வடகொரியா காய்ச்சல் என கூறுவது கொரோனா வைரஸ் தான் என பல்வேறு நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரியும், அதிபர் கிம் ஜாங் உன்னின் நெருங்கிய ஆதரவாளருமான ஹியான் ஷால் ஹய் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அதிபர் கிம் வடகொரியாவின் அதிபராக உருவாகவும், நாட்டின் தலைவராக உருவாகவும் ஹியான் பெரும் பங்காற்றினார். இதனால், ஹியான் மீது கிம் மிகவும் பற்றுகொண்டவராக இருந்தார். ஹியான் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி  அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்றது. 

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அதிபர் கிம் பங்கேற்றார். அவருடன் நூற்றுக்கணக்கான ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், அரசின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அதிபர் கிம் மாஸ்க் அணியாமல் பங்கேற்றார். ஆனால், அதிபர் கிம்மை தவிர அதிகாரிகள் பலரும் மாஸ்க் அணிந்தே இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ராணுவ அதிகாரியின் உடலை அதிபர் கிம் சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!