முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்தது வங்காளதேச அணி

புதன்கிழமை, 25 மே 2022      விளையாட்டு
Bangladesh-team 2022-05-25

Source: provided

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம். ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. 

இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்காளதேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. கருணரத்னே 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

______________

பெண்கள் டி-20 கிரிக்கெட்: வெலாசிட்டி அணி வெற்றி

மூன்று அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. டாஸ் வென்ற வெலாசிட்டி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 51 பந்தில் 71 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலாசிட்டி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 பந்தில் 51 ரன்கள் குவித்தார். லாரா வால்வார்ட், கேப்டன் தீப்தி சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில், வெலாசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகி விருது ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து