முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை

சனிக்கிழமை, 28 மே 2022      உலகம்
Sudan 2022-05-28

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆட்டுக்கு கோர்ட்டால் வினோத தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது. 

தெற்கு சூடான் நாட்டில் ஆக்ரோஷத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின் என்ற 45 வயது பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதில் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான அந்த ஆட்டை தெற்கு சூடான் காவல் துறையினர் தற்போது கம்பி எண்ண வைத்து விட்டனர்.  

கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு தெற்கு சூடான் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கோ, உரிமையாளர் நிரபராதி என்றும், இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

தற்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது. ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய கோர்ட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசு மாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து