Idhayam Matrimony

மீண்டும் தகர்ந்தது ஆர்.சி.பி கனவு: இறுதி போட்டிக்கு ராஜஸ்தான் தகுதி

சனிக்கிழமை, 28 மே 2022      விளையாட்டு
Rajasthan 2021-12-28

மீண்டும் தகர்ந்தது ஆர்.சி.பி கனவு, இறுதி போட்டிக்கு பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

2-வது தகுதிச்சுற்று... 

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

7 ரன்னில் அவுட்...

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். 

158 ரன்கள் இலக்கு...

தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர்  ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

கோலியின் சாதனையை  சமன் செய்த ஜாஸ் பட்லர்

பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ரன்கள் குவித்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.  பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் எளிதாக நுழைந்தது.  

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றிருந்தார்.  இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து