முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-ல் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படும் : நத்தம் விஸ்வநாதன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Natham-Viswanathan 2022 07

Source: provided

சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்று நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று நேற்று  ஆய்வு செய்தனர்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது, 

வரும் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டப்படி வெகு சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும்.  அதே போல், சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறுகின்ற அந்த பொதுக்குழுவில், கடந்தமுறை பொதுக்குழு நிராகரித்த 23 தீர்மானங்களில், ஒருசில தீர்மானங்களைத் தவிர்த்து, மற்ற தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவிலே நிறைவேற்றப்படும்.

குறிப்பாக பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்கி, கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் படைத்தது பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!