முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு: தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் : முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
CM-1 2022 07 04

Source: provided

சென்னை : தொழில் திட்டங்கள் சிறந்திட உறுதுணையாக இருப்போம் என்றும், ஒரு ஸ்மார்ட் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாக அமைந்திருக்கிறது.  இது, இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஒரு நற்சான்றிதழ் ஆகும்.  ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்திலேயே இத்தகைய இமாலயச் சாதனையை நாம் அடைந்திருக்கிறோம். 

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை 5 மாநாடுகளை நடத்தி இருக்கிறோம்.  சென்னையில் இரண்டு மாநாடுகள் நடந்திருக்கிறது.  கோவையில் ஒரு மாநாடும், தூத்துக்குடியில் ஒரு மாநாடும், துபாயில் ஒரு மாநாடும் நடந்துள்ளது. இந்த மாநாடு, ஆறாவது மாநாடாக நடந்து கொண்டிருக்கிறது.  ஓராண்டு காலத்திற்குள் ஆறு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதே ஒரு மிகப்பெரிய சாதனை.

இந்த முதலீட்டு மாநாடுகளுக்கு உயர்ந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  முதலாவதாக, தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும்.  இரண்டாவதாக, தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும்.  மூன்றாவதாக, உலகத்தின் மூலை முடுக்கிற்கெல்லாம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சென்றடைய வேண்டும். நான்காவதாக, மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும், சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதன்மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய வேண்டும்.  இந்த இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உங்கள் தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அனுமதிகளையும் பெறுவதற்கும், உங்கள் தொழில் சிறந்திடவும், உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறேன்.

உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் அளவுக்குத் தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இந்த அரசினுடைய இலக்கு.  நிதிநுட்பத் தொழில்களை மதிநுட்பத்துடன் நம் மாநிலத்திற்கு ஈர்க்க நினைக்கிறோம். அதன் முதற்கட்டத்திலேயே வெற்றியும் பெற்றிருக்கிறோம். 

பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கும்தான்.  மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப, நம் வளர்ச்சிப் பாதைகளை வகுத்துக் கொண்டால், நமது போட்டித்தன்மை பன்மடங்கு அதிகரிப்பதோடு, உலகளவில், நம்மால் முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்து விளங்க முடியும்.  தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து, இந்த ஓராண்டு காலத்தில், எடுத்த முயற்சிகளின் காரணமாக, இதுவரை 192 ஒப்பந்தங்கள் போட்டப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய். 

பல துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்து, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.   இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மாநாடுகளிலேயே இந்த மாநாடுதான் மிகப் பெரிய மாநாடாக அமைந்துள்ளது.  வருங்காலங்களில் இதையும் விட பெரிய முதலீட்டு மாநாடுகளை நடத்த வேண்டும் என்று அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். 

தொழில்துறையின் வளர்ச்சி என்பது அந்தந்த வட்டாரத்தின் சமூக வளர்ச்சியாக மாறி தமிழ்நாடு உன்னத தமிழ்நாடாக, மேன்மையான தமிழ்நாடாக உயர வேண்டும். தமிழ்நாட்டு அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில் நிறுவனங்களும் வர வேண்டும். அந்தத் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தகுதி படைத்தவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களும் உருவாக வேண்டும். அதற்கு இத்தகைய முதலீட்டு மாநாடுகள் அடித்தளமாக அமையட்டும். 

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து