முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தின் புதிய நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் நியமனம் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

புதன்கிழமை, 6 ஜூலை 2022      உலகம்
Boris-Johnson 2022 01 30

Source: provided

லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார். 

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், இங்கிலாந்தின் நதீம் சஹாவி நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லே சுகாதார அமைச்சராகவும் செயல்படுவார் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து