எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிஷங்களில், ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைத்த பயனா்கள் மட்டுமே, ஐஆா்சிடிசி வலைதளம் அல்லது அதன் செயலியில் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து ரயில்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. டிக்கெட் முன்பதிவின் பயன்கள் பயணிகளுக்கு கிடைக்கும் வகையிலும், சிலா் அதை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்திய ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு (பி.ஆா்.எஸ்.) கவுன்ட்டா்களில் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அந்த அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘ஏற்கெனவே தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த பலன்களை கருத்தில் கொண்டு, தற்போது பொது முன்பதிவுகளுக்கும் அந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


